கடந்த சில நாள்களாக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 50 கோடி ரூபாய்க்குமேலாக சுருட்டிய ஒரு நிறுவனத்தின் பெயர் ஏடுகளில் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.
தங்கக் காசு மோசடிச் செய்தி இன்னொரு பக்கம்!
சென்னை அண்ணா நகர், நெற்குன்றம் உள்பட அய்ந்து இடங்களில் விஸ்ப்ரோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அலுவலகங்களைத் திறந்து ஒரு மோசடித் தொழிலை நடத்தியுள்ளனர்.
ஜாவா புரோகிராமர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த மோசடியில் சிக்கியவர்கள் படித்தவர்கள் - அதில் ஒருவர் இராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்.
ஆயிரக்கணக்கில் புகார்கள் குவிந்த நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.படித்தவர்கள் இப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுவதும், படித்தவர்கள் இத்தகு மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாறுவதும் நம் நாட்டுப் படிப்பின் தகுதியை எடை போடுவதாக அமைகிறது.
ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று கூறப்படுவது உண்டு. என்றாலும், இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்துபற்றிச் சிந்திப்பதும், செயலாக்கங்களை உருவாக்குவதும் அவசியமாகும்.
ஒரு நிறுவனத்தை உருவாக்குவது, நடத்துவது என்றால், அதற்குமுன் அதன் நம்பகத் தன்மைக்கான உத்தரவாதங்கள் இருந்து தீரவேண்டும்; அதற்குச் சட்ட ரீதியாக சில ஏற்பாடுகளைச் செய்வதுபற்றி அரசு யோசிக்கலாம்.
உலகியல்பற்றி தெரிந்துகொள்ளாத வெறும் காகிதப் படிப்புப் பட்டதாரிகளைத்தான் நம் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானவர்களை அனுப்பிக் கொண்டு இருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பாடத் திட்டத்தில்கூட விழிப்புணர்வு தொடர்பான பகுதிகள் இருக்க வேண்டும் என்பதை இந்த மோசடிச் சம்பவம் வலியுறுத்துகிறது.ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பட்டதாரிகள் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள்.
வேலை வாய்ப்பைத் தேடி அலைந்து திரிகிறார்கள். இந்தச் சூழலை மோசடிப் பேர்வழிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடன் வாங்கிக் கல்வி கற்றுப் பட்டமும் பெற்றவர்கள் வேலைகளைப் பெறுவதற்காகவும், கடனை வாங்கிச் செலுத்தி, எப்படியாவது வேலை கிடைத்தால் சரி என்கிற வெறியில் கருத்தை இழந்தவர்கள் ஆகிறார்கள்.
மோசடிக்காரர்களை விரைவில் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்தி, கடுமையான தண்டனைகளை வாங்கிக் கொடுப்பதன்மூலம் - அத்தகைய செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் அளவுக்குப் பரவுவதன்மூலமே, வேலைத் தேடி அலையும் இளைஞர்கள் மத்தியிலே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த முடியும்.
மோசடிக்காரர்கள் தம் கையில் சிக்கிக்கொண்டு இருக்கிற பெரும் பணத்தின்மூலம் சட்டத்தின் சந்து, பொந்துகளில் இலகுவாக நுழைந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். பணம்தான் பாதாளம் வரை பாயும் என்று வேறு சொல்லி வைத்துள்ளனர். இதற்கு இடம்தராமல் காவல்துறை நடந்துகொள்ளவேண்டும்.
பல்கலைக் கழகங்களேகூட போலியாக நடக்கின்றன என்று அத்தகுப் பல்கலைக் கழகங்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகின்றன. அந்தப் பல்கலைக் கழகங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை?
சில குறிப்பிட்ட மோசடிப் பல்கலைக் கழகங்களின் பெயர்கள் ஆண்டுதோறும் வெளிவரவும் செய்கின்றன.அது எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.
நமது சட்டத்தில் ஏதோ ஓட்டை இருக்கிறது; நடைமுறைக் கண்ணோட்டம் இல்லாத ஏட்டுச் சுரைக்காயாக உள்ளன என்றே நினைக்கத் தோன்றுகிறது.
இவற்றையெல்லாம் அடைத்து, குற்றம் செய்பவர்கள் தப்பிக்கவிடப்படாமல் தக்க தண்டனைகளைப் பெறச் செய்வதன் மூலமாகத்தான் மோசடிகளைத் தடுக்கவும், ஏமாறுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும்.அரசுகள் சிந்திக்குமாக!
Tuesday, July 1, 2008
முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை - ஒரு ஆய்வு
கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது. 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.
குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லிம்இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லிம்இளைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு. இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லிம்சமுதாயம். இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.
எனவே இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்லிம்களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?
முஸ்லீம் அரசியல் வாதிகள்:-
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லிம்சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :-
முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லிம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆலிம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லியாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், ஷிர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்
சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்
அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லிம்மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்
உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடகங்கள்
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லிம்களை தனிமை படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள்( பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லிம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள்
பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லிம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன?
பல்வேறு முஸ்லிம்அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம்இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லிம்அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.
அனைத்து முஸலி்ம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.
படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கல்வி உதவி அமைப்புகளை பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளோம். உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும்.
“”எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை .” அல்-குர்ஆன்(8:53)
source:Dravidamuslium

Saturday, June 7, 2008
விலைவாசி ஏன் உயர்கிறது ?
நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.
சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.
மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.
வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.
1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.
ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.
ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.
அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.
லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

இந்தியாவும் பணவீக்க உயர்வும் !

நாட்டின் பணவீக்கம் கடந்த மே 13ம் (2008) தேதியுடன் முடிந்த வாரத்தில் 7.83 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சகட்டமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பலன் இல்லை. இதைப்பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்வதற்க்கு முன் சில கேள்விகளுக்கு விடையறிந்துக்கொள்வோம்.
பணவீக்கம் என்றால் என்ன ?
பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது . தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!
பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.
இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7.83 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7.83% அதிகரித்திருக்கிறது. இந்த ‘மதிப்புக் கூட்டிய சராசரி’ என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.
பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ‘வெயிட்’ என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய ‘வெயிட்டை’ அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.
பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.
அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.
அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)